Mar 18

காணாமலாக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி 2ஆம் நாளும் போராட்டம்

வடக்கு கிழக்கில் காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரியும்   சிறைச்சாலைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடன் விடுதலைசெய்யுமாறும் வலியுறுத்தி  கொழும்பு  கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது

முருகேசு சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் யுத்தத்தின்போது வடக்கு கிழக்கில் காணாமல்போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், சம உரிமை இயக்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த உறவினர்கள் எதிர்வரும் 23ஆம் திகதிவரையில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.