Oct 19

தாத்தாவைஎரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த நபர்!


தாத்தாவைஎரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த நபர் ஒருவரால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், மாணவர் ஒருவர் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக மாணவர்களுக்குக் கொடுத்து ருசித்துள்ளார்.குறித்த மாணவர், வீட்டில் பிஸ்கட் தயாரிக்கப்பட்ட மாவிலும், சர்க்கரையிலும் கலந்து பிஸ்கட் தயாரித்துள்ளார். பின்னர் அதை பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வந்து சக மாணவர்களிடம் அளித்துள்ளார்.

தான் வித்தியாசமான முறையில் பிஸ்கட் செய்துள்ளேன். அதை உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன் எனத் மாணவர் கூறியுள்ளார். அதைநம்பி 9 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

ஆனால், சாப்பிட்ட சிலமாணவர்கள் பிஸ்கட்டில் மனித எலும்புகள் வாசனை இருப்பதாகவும், மணல்போன்று பிஸ்கட் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அந்த மாணவர், தான் தயாரித்த பிஸ்கட் தன்னுடைய தாத்தா உடலில் இருந்து எரிக்கப்பட்ட சாம்பலை மாவில் கலந்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.