Jun 16

புதிய பாதுகாப்புக் கொள்கையில் விண்வெளி மற்றும் இணையவழித் தாக்குதல்களை முன்னிலைப்படுத்தும் பாதுகாப்பமைச்சர்

புதிய பாதுகாப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக  இணைய வழித்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு கனேடிய அரசு முன்னுரிமை கொடுத்துள்ளதாகக் கனேடியப் பாதுகாப்பமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார். நேற்று (ஜூன் 14) எட்மன்டன் நகரில் இந்த அறிவிப்பை அவர் விடுத்தார்.

இணைய  வழித்தாக்குதல்களைப் பொறுத்தவரை கனடா இதுவரை தற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும், எதிரிகளிடமிருந்தும், உருவாகிவரும் புதிய தொழிநுட்பங்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள கனடா இனிவரும் காலங்களில் தனது தாக்குதிறனை அதிகரித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

இணையவழித்தாக்குதல்களுக்கு எதிர்த்தாகுதல்களை மட்டுமே நடத்திக்கொண்டிருத்தல் என்பது நீண்ட நேரம் எடுப்பதும், ஆபத்து அதிகமானதுமாகும். ஆதலால் கனேடிய ஆயுதப்படையினர் இணையவழித்ததாக்குதல்கள் நடைபெற முன்னரே அவற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலைக் கொண்டிருத்தலே அவசியம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.