Jun 16

வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் வருகையை இலகுவாக்குகிறது கனேடிய அரசு

வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்கு வருகை தரும் ஆராய்ச்சியாளர்கள் கனடாவில் தங்கி இருகுக்கும் காலப் பகுதியில்  120 நாட்கள் வரை விசேட அனுமதிப்பத்திரங்கள் ஏதுமின்றி ஆராய்சி நடவடிக்கைகளில் ஈடுபட கனேடிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் இந்த முடிவைக் கனேடியப் பல்கலைக்கழகங்கள் வரவேற்றுள்ளன. ஜூன் 12 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நடைமுறையுடன், திறன் வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் துரித விசாவழங்கும் திட்டமும் அமுலுக்கு வந்துள்ளமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது. 

வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்கு வருகை தரும் ஆராய்ச்சியாளர்கள், அரச நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களிலோ அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களிலோ 

12 மாதங்களுக்கு ஒரு முறை 120 நாட்களுக்கு கனடாவில் தங்கி இருந்து ஆராய்சி நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும்.

புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய முதலீடுகளை மேற்கொள்ளும் தொழில் வழங்குவோர்களுக்கு, அனுபவம் வாய்ந்த தலைவர்கள், செயல் விரைவுடைய ஆராய்ச்சியாளர்கள் அல்லது தனித்துவமான திறன் கொண்ட புத்தாக்க வல்லுனர்கள் போன்றவர்களது பங்களிப்புக்கள் அதிகம் தேவைப்படும்.

இத்தகையோரை கனடாவில்  உடனடியாகக் கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் உண்டு. ஆகையால் இம்மூதலீடுகள் மேற்கொள்ளப்படாமலேயே போகக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம், இவற்றைத் தவிர்கும்பொருட்டே இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன் தெரிவித்தார்.