Jun 15

முஸ்லிம்கள் மீதான வெறுக்கத்தக்க குற்றச்செயல்கள் அதிகரிப்பு

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் வெறுக்கத்தக்க குற்றச் செயல்கள் கடந்த 2015 ஆம் ஆண்டில் 5 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில் 99 சம்பவங்களிலிருந்து 2015 ஆம் ஆண்டில் 159 சம்பவங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெறுப்புணர்வுகளால் தூண்டப்பட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 1362 ஆக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது முந்தைய ஆண்டிலும் 67 அதிகமானதென கூறப்படுகின்றது.

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வெறுப்புணர்வு சார்ந்த குற்றச்சாட்டுக்களில் 48 சதவீதமானவை ஒரு இனத்தின் மீதான வெறுப்பு காரணமாக தூண்டப்பட்டதாகவும் 35 சதவீதமானவை மத வெறுப்புணர்வு காரணமாக தூண்டப்பட்டவையாகவும் 11 சதவீதமானவை பாலியல் சார்ந்த குற்றச்செயல்களாவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெறுப்புணர்வு சார்ந்த குற்றச்சாட்டுக்கள் எட்டு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அல்பேட்டாவில் அதிகூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.