Jun 15

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு; வங்கத்தை வீழ்த்தினால் பாக்., உடன் தீப்பொறி ஆட்டம்...!

2வது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்த பாகிஸ்தான், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் பிர்மிங்ஹாம் நகரில் இன்று 2வது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதிரடி வீரர் யுவராஜ் சிங் இன்று 300வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.

அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதும். அதனால் சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.வங்கதேச அணி வீரர்கள்:

தமிம் இக்பால், சௌமியா சர்கார், சப்பீர் ரஹ்மான், முஷபிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன், முஹமதுல்லா, முசட்டெக் ஹுசைன், மஸ்ரஃபே மொர்டசா, ருபெல் ஹுசைன், டஸ்கின் அஹமத், முஸ்டபிஸர் ரஹ்மான்

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் ஷர்மா, தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், தோனி, ஜாதவ், பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், பும்ரா