Jun 15

இந்த விஷயத்தில் ஜியோவை முந்திய ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோவை முந்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு தொடர்ந்து சிக்கலான சூழல் தொடரும் என டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 26 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என விசிட்டர் லொகேஷன் ரெஜிஸ்டர் தெரிவித்துள்ளது. இதே மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவில் 4,00,000 பேர் மட்டுமே ஜியோவில் இணைந்துள்ளனர்.  

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்கில் இணைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஜியோவின் கட்டண சேவைகள் துவங்கியுள்ளதால் வரும் மாதங்களில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜியோ போட்டியை எதிர்கொள்ள புதிய சலுகைகள், விலை குறைப்பு உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை மற்ற நெட்வொர்க்களில் இணைய வழி செய்வதாக கூறப்பட்டுள்ளது.  

வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ச்சியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்கலாம் என்றும் டெலிகாம் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.