Mar 18

அமெரிக்க - சீன முக்கிய சந்திப்பு வடகொரியா குறித்து பேச்சு

சீனாவுக்கு இன்று  உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் செயலாளர் ரெக்ஸ் டில்ர்சனுக்கும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஐக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி அச்சுறுத்தும் வடகொரியாவின்  ஆத்திரமூட்டும் வகையிலான செயல்களை இல்லாதொழிப்பதற்கு சீனாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இந்த சந்திப்புக்கு பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க செயலாளர்

கடந்த இருபது ஆண்டுகளாக வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பது பற்றி பேசினோம். 

வடகொரியா அரசு சிறந்த பாதையை தேர்வு செய்வதுடன், மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பணியில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். 

இந்த உறுதிப்பாட்டை இப்போது புதுப்பித்துள்ளோம். அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதற்கு வாங் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்றார்.

ஐ.நா. சபையின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்தும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறiமை குறிப்பிடத்தக்கது.