Jun 15

ஜியோ போட்டியை எதிர்கொள்ள ஆர்காம் அதிரடி: ரூ.16.66க்கு இலவச வாய்ஸ் கால்ஸ், 4ஜி டேட்டா அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது திட்டத்தின் விலையை குறைத்துள்ளது.

இவற்றில் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால்ஸ், 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.ரிலையன்ஸ் ஜியோவின் மலிவு விலை திட்டங்களை எதிர்கொள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மூன்று புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய சலுகை திட்டங்களில் ஆர்காம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 28 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது. 

ஆர்காம் அறிவித்துள்ள புதிய திட்டங்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மும்பை, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்படுகிறது. புதிய திட்டங்களை வாடிக்கையாளர்கள் ஆர்காம் இணையதளம் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும். 

போஸ்ட்பெயிட் திட்டங்களின் கீழ் ரூ.699,ரூ.499 மற்றும் ரூ.299 விலையில் வழங்கப்ட்டு வந்த திட்டங்களின் விலை 28 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.499, ரூ.399 மற்றும் ரூ,249 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.499 மற்றும் ரூ.249 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும், ரோமிங்கின் போது இலவச அழைப்புகள் மற்றும் 3000 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.