Mar 18

கனடாவில் சிறு விமானங்கள் மோதின விமானியொருவர் பலி

கனடாவில் நடுவானில் விமானங்கள் மோதியதில் அவை பலத்த சேதத்திற்கு உள்ளானதோடு விமானியொருவரும் உயிரிழந்துள்ளார்.

கனடாவில் மான்ட்ரியல் பகுதியில் இரண்டு சிறிய விமானங்கள் விண்ணில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடுவானில் ஒன்றையொன்று மோதிக் கொண்டன.

இதனால் நிலை தடுமாறிய விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஒரு வணிக வளாகமொன்றின் மீது விழுந்து ஒரு விமானமும் மற்றொன்று அங்குள்ள வாகன தரிப்பிடத்திலும் விழுந்து நெருங்கியுள்ளது.  

விபத்துக்குள்ளான விமானங்களில் ஒரு விமானி உயிரிழந்ததோடு மற்றொரு விமானியும் உதவியாளர்கள் இரவருமாக மூவர் பேரும் படுகாயமைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.