Jun 14

ரோம் நகருக்கான குடியேற்றவாசிகளின் வருகையை நிறுத்த கோரிக்கை

ரோம் நகருக்கான குடியேற்றவாசிகளின் வருகையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரோம் மேயர் வேர்ஜினியா ராக்ஜி, இத்தாலி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு குடிமக்களின் தொடர்ச்சியான வருகையை நிறுத்தி வைக்குமாறு கோர் அரசாங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோம் நகருக்கான குடியேற்றவாசிகளின் தொடர்ச்சியான வருகையானது, சமூகத்தில் பதற்றமான சூழ்நிலையை தோற்றுவிக்கக் கூடும் என்ற நோக்கிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டுமுதல் இதுவரை சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் படகு மூலம் வருகை தந்துள்ளதுடன், சுமார் 2 இலட்சம் பேர் நாடளாவிய ரீதியில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், சமூகத்தினரிடையே மேலும் பதற்றம் ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.