Mar 18

ஹோலி காயம்; சிகிச்சை தொடர்கிறது

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில், இந்திய அணித்தலைவர் விராட் ஹோலி முதல் நாள் ஆட்டத்தின் போது காயமடைந்துள்ளார்.

2ஆவது நாளில் எல்லைக்கோட்டை நோக்கி சென்ற பந்தை தடுத்த போது வீழ்ந்ததில் தோள்பட்டையில் காயமடைந்ததன் காரணமாக அவர் களத்தை விட்டு வெளியேறியிருந்தார். 

அவருக்கு பதிலாக அபினவ் முகுந்த் களத்தடுப்பைச் செய்தார்.  அணித்தலைவர் பொறுப்பை ரஹானே பார்த்துக்கொண்டார். 3ஆவது நாளான இன்று பேட்டிங் செய்ய கோஹி தயாராகி களமிறங்கிய போதும் 23பந்துகளைச் சந்தித்து 6 ஓட்டங்களையே பெற்று ஆட்டமிழந்தார்.

காயம் பெரிதாக இல்லாது விட்டாலும் தோள்பட்டை வலியை குணமாக்குவதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார். இந்தப்போட்டியில் தொடர்ந்தும் களமிறங்குவாரா என்பது குறித்து இன்னமும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் அறிவிக்கவில்லை.