Jun 14

ஒன்ராறியோவில் இளைஞன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

ஒன்ராறியோ வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த 28 வயதுடைய குறித்த இளைஞர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் விமானம் மூலம் ரொறன்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில், 18 வயதுடைய பேய்லே மக்ஃபர்லான் மற்றும் 20 வயதுடைய புரோடி ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியமை, ஆயுதத்தினால் தாக்கியமை மற்றும் ஆபத்தான நோக்கம் கருதி ஆயுதம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

தொடந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.