Jun 14

பிறந்த உடன் ஸ்டைலாக படுத்திருக்கும் குழந்தை!! டிரண்டாகும் புகைப்படம்!!

பிறந்து ஒரு மணி நேரத்தில் படு ஸ்டைலாக படுத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் இந்திய டுவிட்டர் பக்கங்களில் டிரண்டாகி வருகிறது.

பிறந்து ஒரு மணி நேரத்தில் தலைக்கு தனது கையை கொடுத்து படு ஸ்டைலாக குழந்தை படுத்திருக்கும் புகைப்படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ரீடுவீட் செய்து வருகின்றனர்.

இந்தக் குழந்தை எந்த நாட்டில், எங்கு, எப்போது, யாருக்குபிறந்தது, எந்த மருத்துவமனையில் பிறந்தது போன்ற விவரங்கள் இல்லை.பிறக்கும்போதே ஞானத்துடன், புதிய சிந்தனைகளுடன், எப்படி இந்த உலக மக்களை சமாளிப்பது போன்ற பல்வேறு சிந்தனைகளுடன் பிறந்தது போல் ''போஸ்'' கொடுத்து இருப்பது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.