Jun 14

லண்டனில் 24 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

மேற்கு லண்டனில் லதிமேர் சாலையில் உள்ள 24 அடுக்குமாடி கிரீன் பீல் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

40 தீயணைப்பு வாகனங்களில் 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த கட்டடத்தில் 120 வீடுகளில் வசித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர் என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.