Jun 14

தல மட்டுமல்ல! அவர் படத்திற்கும் மவுஸ் கூடதான்! அஜீத் படம் அதிக தொகைக்கு விலைபோனது!

அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படம் அதிக தொகைக்கு விலை போனதாக கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது நடித்து வரும் படம் ‘விவேகம்’. படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அஜீத்துக்கு வில்லனாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். மேலும் படத்தில் முக்கிய கேரக்டரில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

சிவா & அஜீத் கூட்டணியில் இதற்கு முன் வெளியான இரண்டுபடங்களும் நல்ல வசூல் சாதனை படைத்தது. அதனால் இந்தப்படத்தையும் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். சென்னை மற்றும் மதுரை ஏரியாக்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்ட நிலையில், கோவை ஏரியா 9 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்தவொரு அஜீத் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.