Jun 13

திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட உள்ள லிபரல் அரசின் குடிவரவுச் சட்டமூலம்

கனேடிய குடிவரவுச் சட்டமூலத்திற்கு செனட் சபையினால் முன்வைக்கப்பட்ட  சில திருத்தங்களை ஏற்றுக்கொள்ள லிபரல் அரசு தயாராக உள்ளதாக கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

C-6 என அழைக்கப்படும் இத்திருத்தச் சட்டமூலம், முன்னைய பழமைவாத அரசினால் கனேடிய குடிவரவுச் சட்டமூலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட  திருத்தங்களை ரத்துச்செய்யும் முகமாக வடிவமைக்கப்பட்டதாகும். குடியுரிமையைப் பெற தகுதிபெறல், குடியுரிமையை இழக்கும் சந்தர்ப்பங்கள் என்பன தொடர்பாக பழமைவாத அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட  திருத்தங்களை, C-6 என அழைக்கப்படும் இத்திருத்தச் சட்டமூலம் மீண்டும் மாற்றி அமைக்க உள்ளது.

மேலும் பல  திருத்தங்களை உள்ளடக்கிய இச்சட்டமூலம், பிரதானமாக இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள், பயங்கரவாதம், தேசத்துரோகம் அல்லது உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படலாம் என்ற சரத்தையும் மாற்றியமைக்க உள்ளது. டொரொன்டொ நகரில் 2006 ஆம் ஆண்டில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள இருந்த சந்தேக நபரான சகரியா அமாரா இன் குடியுரிமை மீளப்பெறுதல் தொடர்பாக இச்சட்டமூலம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

செனட் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை சில திருத்தங்களுடன்  ஏற்றுக்கொள்ள லிபரல் அரசு தயாராக உள்ளதாக கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசேன் தெரிவித்துள்ளார். தனிநபர்களினால் மேற்கொள்ளப்படும் வேண்டுகோள்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரமும், இத்திருத்தத்தின் மூலம்   அமைச்சருக்கு வழங்கப்படும்