Jun 13

விசேட திறனுடையோரை வரவழைக்க புதிய விசா

விசேட திறனுடையவர்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கும் பொருட்டு ஜூன் 12 முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய விசா நடைமுறையை கனேடிய தொழிநுட்பக் கம்பனிகள் வரவேற்றுள்ளன.

ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் Global skills visa program என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் , துரித வளர்சி கொண்டுள்ள கனேடிய தொழிநுட்ப நிறுவனங்கள், தனித்துவமான திறனுடையவர்களை 2 வார காலப்பகுதிக்குள் கனடாவிற்கு வரவழைக்கலாம். இரண்டு வருடங்களுக்கு செயற்படுத்தப்பட உள்ள இந்த முன்னோடித் திட்டத்திற்காக அரசு $7.8 மில்லியன்  அளவான தொகைய ஒதுக்கியுள்ளது.

இத்தகையோரை வரவழைக்க நீண்ட காலம் எடுப்பதால், திறன் மிகுந்தோரை வரவழைக்கும் சந்தர்ப்பத்தை தாம் இழந்துவிடுவதாக கனேடிய நிறுவனங்கள் தம்மிடம் தெரிவித்ததாக தொழில் அமைச்சர் பற்றீசியா ஹஜ்டு தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கான ஒரு “பின்கதவாக” இத்திட்டம் இருக்காது எனவும், கனேடிய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிக்கமர்த்த முடியும் எனவும்  அவர் மேலும் கூறினார்.