Jun 13

தேவைகள் நிறைந்த குடும்பங்களுக்காக தேசிய சிறுவர் பராமரிப்புத்திட்டம்

சிறுவர் பராமரிப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசினால் $ 7 பில்லியன் அளவான தொகை மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தரத்தில் உயர்ந்த, எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய, நெகிழ்சித்தன்மை உடைய, கட்டுப்படியாகக் கூடிய நிகழ்சிகளை இத்திட்டத்தின் மூலம் கனேடிய மாகாணங்களில் உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு இந்நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது. இத்திட்டமானது தேவைகள் அதிகமாக உள்ள குடும்பங்களுக்காகவே அமுல்படுத்தப்பட உள்ளது.

மாகாண மற்றும் பெருநிலப்பரப்புக்களின் அமைச்சர்கள் ஜூன் 12 அன்று ஒட்டாவா நகரில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார்கள். சிறுவர் பராமரிப்புக்குப் பொறுப்பான மத்திய அரசின் சமூக மேம்பாட்டு அமைச்சர் டுக்ளோஸ் அரசின் பிரதிநிதியாக இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார்.  இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் ஒன்ராரியோ மாகாணம் எதிர்வரும் வெள்ளியன்று ( ஜூன் 16) கைச்சாத்திடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.