Sep 27

திருகோணமலை காட்டினுள் கண்ணகி தாய் கவனிப்பின்றி காணப்படும் அவலம்!


ஈழத்தின் திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும்,யுத்தகாலததில் பலமுறைபாதிகாகப்பட்டதுமான "கப்பல்துறை"காட்டினுள்"புராதான"
கண்ணகி வழிபாடு இடம் பல நூற்றாடுகள் கைவிடப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது வேதனையை தருவதாக உள்ளது..

பதிவில்,ஆலயம் முழுவதுமாக இடிந்து,ஆலயம் இருந்ததற்கான கைகள் சேதமான நிலையில் உள்ள கண்ணகி சிலையும்,ஆங்காங்கே காணப்படும் கட்டிட இடிபாடுகளும்,சேதமடைந்து தூர்வாரி பாமரிப்பு இன்று பல நூற்றாண்டுகளாக காணப்பட்ட கண்ணகி குளமும் வேதனை தரும் சாட்சிகளாக உள்ளன...கண்ணகியின் சிலம்பு கிடைத்திருப்பது மகிழ்வை தருகிறது..!!

கண்ணகி தமிழில் எழுந்த ஐப்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி.கற்பிற்கு சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள்,எவ்வித ஆராய்வுமின்றி பொய் குற்றச்சாட்டின் மீது கொலை தண்டனைக்கு உட்பட்ட,தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் "நெடுஞ்செலியன்"னிடம் வாதிட்டு நிரூபித்தாள்.தன் பிழை கண்டு பாண்டிய மன்னனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர்.கோபம் அடங்காத கண்ணகி மதுரை கதரை தன் கற்பின் வலிமையால் எரித்ததாக "சிலப்பதிகாரம்"கூறுகிறது.சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளை,சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான்.இவ்விழாவில் இலங்கை கயபாகு மன்னன் கலந்து கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.இதன் மூலம் இலங்கையில் 1800 ஆண்டுகளாக கண்ணகி வழிபாடு நடைபெறுகிறது...

பூம்புகாரை தலைநகராகக் கொண்ட சோழ நாட்டில் பிறந்து,பாண்டிய நாட்டில் புரட்சி செய்து சேர நாட்டில் தெய்வமாகிய கண்ணகி கி.பி இரண்டாம் நூறாறாண்டில் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கயபாகு மன்னன் காலத்தில் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு சிங்கள் மக்கள் மத்தியிலும்"பத்தினிதொய்யோ"என பக்தியுடன் வணங்கப்பட்டு வருவதை இன்றும் காணலாம்...திருகோண மலைக்கும்,தம்பலகாமத்திற்கும் மத்தியில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் "புராதான கண்ணகி வளிபாடு"இடம் ஒன்று இருப்பதாக கப்பல்துறை கிராம இளைஞர் ஒருவர் மூலம்
கண்டு பிடிக்கப்பட்டது.

ஈழத்தில் கண்ணகி வழிபாடு பிரசித்தமான ஒருா பராதான வழிபாடாகும்.திராவிட பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாடினையே கண்ணகியம்மன் வழிபாட்டில் நாம் காண்கிறோம்.கண்ணியம்மனுக்கு ஈழததில் ஆலயங்கள் அமைத்து வருந்தோரும் பொங்கல் படைத்து குளர்த்தி பாடி வழிபடுவதை காணலாம்.

கப்பல்துறை கண்ணகியம்மன் ஆலயம் காட்டினுள் இருப்பதை அறியத்தந்ததும்,இதை கண்டுபிடித்த கப்பல்துறை இளைஞர் .சதீஸ் உடன் ஆலயம் இருந்ததற்கான அடர்ந்த காட்டினுள் சென்று ஆலயம் இருந்ததற்கான இடங்களை கண்டறிந்து புகைப்படங்கள் மூலம் வெளி உலகிற்கு அறியப்பட்டது.

கிராமத்தில் இருந்து அடர்ந்த காட்டுப்பகுதியில் நீண்ட தூரம் நடந்து சென்றால் பல நூற்றாண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் அம்மன்குளத்தினை தூர்ந்த நிலையில் காணலாம்(படத்தில் உள்ளது).

யுத்த காத்தில் மக்கள் இடம் பெயரினால் இந்த இடம் கைவிடப்பட்ட நிலையில் காடாக காட்சியளிக்கிறது.

கவாட்டிக்குடா காளியப்பு என்பவரால் அவருக்கு சொந்தமான நிலத்தில்  கண்ணகி அம்மனுக்கு அமைக்கப்பட்ட ஆலயம் இதுவாகும்.அவரால் அமைக்கப்பட்ட கண்ணகி அம்மன் "ஆசனகல்லினை"மையப்டுத்தி இந்த வழிபாட்டிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.இங்கிருக்கும் கண்ணகி சிலயினை சில பௌத்த சிங்கள விசமிகள் சேதப்படுத்தயிருப்பதாக தெரியவருகிறது.

காடாக இருந்த இடத்தினை தன்னார்வம் கொண்ட கப்பல்துறை சில இளைஞர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் துப்பரவு செய்து சீர்படுத்தியிருக்கிறார்கள்.பல தடைகள் அச்சுருத்தல்கள் என அனைத்தையும் தாண்டி இந்த ஆலயம் தற்போது சீர் செய்யப்பட்டு இருககிறது.

ஈழத்தின் வடகிழக்கை பொருத்தவரை வழிபாட்டிடங்கள் சமய காரணங்களுக்கு அப்பால் அங்கு வாழும் மக்களின் இருப்பினை உறுதிபடுத்தும ஆதாரங்களாகவும் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் பெரியார் ஒருவரால் கப்பலதுறை கண்ணகி அம்மன் மீது பாடப்பட்ட"அடைக்களப்பத்து"பாடல்கள் இனக்கலவரம் மற்றும் யுத்தத்தால் அழிந்து விட்டது வேதனையை தருகிறது!!

புத்தகங்களிலும்,இனையத்திலும் தமிழர் வரலாற்று ஆதாரங்களை தேடிக் கொண்டிருப்பவர் மத்தியில் உயிர் வாழ்தலுக்காக அன்றாடம் கடினமாக உழைத்துக் கொண்டு,தங்கள் இருப்பையும்,அடையாளப்படுத்தல்களையும் அழிய விடாமல் காக்கும் அந்த கப்பல்துறை மக்களைப் பற்றிய எண்ணங்கள் மனதை கனக்க செய்கிறது..

கப்பல்துறை இளைஞர் சதீஸ் செய்து கொண்டிருந்த வேளையை நிறுத்திவிட்டு இந்த ஆலய கண்டு பிடிப்புக்கும் மற்றும் ஆலய துப்பரவு பணி என அயராது உழைத்த இந்த சதீஸ் போன்றோர்தான் நாளை ஈழத்தின் தோள் கொடுக்கும் அசையா தூண்கள்...'வாழ்க அவர் புகழ்'..