Sep 26

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை


ஹெரோயின் போதைப் பொருள் கிராம் 09 ஐ உடமையில் வைத்திருந்த மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இளைஞர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று இந்த உத்தரவை பிறப்பத்திதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

2012ம் ஆண்டு கிரேண்பாஸ் பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட 23 வயதுடைய ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றங்களுக்கும் வெவ்வேறாக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.