Sep 26

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு


சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ஜே. தடல்லகே அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கம் தெரிவிக்கின்றது. 

இது சம்பந்தமாக நேற்று அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே கூறினார். 

தற்போது செத்சிறிபாயவில் அமைந்துள்ள சமூர்த்தி அபிவிருத்தி பிரதான அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகளும் கடமைகளில் இருந்து விலகி இருப்பதாக சாமர மத்துமகலுகே கூறினார்.