Sep 26

தியாகி திலீபனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அஞ்சலி

தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் அஞ்சலி நிகழ்வை நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் கடந்த 583 நாட்களாக இம்மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.