Sep 26

சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான அமைப்பு எழுப்பியுள்ள கேள்வி

காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில், சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனோர் அலுவலகம் கடந்த மாதம் தமது இடைக்கால அறிக்கயை சமர்ப்பித்திருந்தது.

இதில் நீதி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.குறித்த பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் 10 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது காலத்தை கடத்தும் செயலாக அமையக்கூடாது என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.மேலும் இந்த குழுவில் போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் விடயத்தை நிராகரித்தவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை, சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.