Sep 26

ஆடம்பர விவிட் பிங் வைரக்கல் ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளது

ஆடம்பர விவிட் பிங் வைரக்கல் ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள குறித்த வைரம் சுமார் 50 மில்லியன் டொலர்களுக்கு மதிப்பிடப்பட்டுள்ளதாக ஏல விற்பனை நிறுவனமான கிறிஸ்டி தெரிவித்துள்ளது.

18.96 காரட் எடை கொண்ட இந்த வைரம், கிறிஸ்டியின் வரலாற்றில் ஏல விற்பனைக்கு வரும் மிகப்பெரிய தொகை இது என சர்வதேச ஆபரண இயக்குனர் டேவிட் வாரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கிறிஸ்டியில் என்னுடைய 40 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற எதையும் என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை.

இங்கு இதனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற வைரக்கல் இருப்பதை நம்ப முடியவில்லை. அற்புதமாக இருக்கிறது. அத்துடன் நம்பமுடியாத பிரகாசமாகவும் உள்ளது. அழகாக வெட்டப்பட்டுள்ளது’ என்கிறார்.

மேலும், இந்த வைரக்கல் 30 முதல் 50 மில்லியன் டொலர்களுக்கு மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கிறிஸ்டி ஆபரண வகைகளுக்கு மதிப்பிட்ட தொகையில் இதுவே அதிக தொகை என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி ஜெனீவாவில் ஏலத்துக்கு வரும் இந்த வைரக்கல் தற்போது லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.