Sep 26

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகள்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் அதற்கு உரிய வகையில் முகம் கொடுத்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்னோக்கி நகர்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ஆட்சி காலத்தில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 14 சதவீத வீழ்ச்சியை கண்டபோது, அதனை கட்டுப்படுத்த மகிந்தராஜபக்ஷவினால் முடியவில்லை.

அந்த காலத்தில் 1.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு ஒதுக்கம் இதற்காக பயன்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் வெளிநாட்டு ஒதுக்கங்களை டொலர் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த பயன்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக மகிந்த அரசாங்கத்தின் கடன்களை செலுத்தவே பயன்படுத்துகிறது.

அவ்வாறு செய்யவில்லை என்ற கிரேக்கத்தைப் போன்று மிகப்பெரிய பொருளாதார வங்குரோத்து நிலைக்கு இலங்கை தள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.