Sep 25

தமிழ் மக்களினால் மாத்திரமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்

தமிழ் மக்களினால் மாத்திரமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு கட்சி இன்னொரு கட்சி சொல்வதனை கேட்பதில்லை. ஆனால் மக்களின் கருத்துக்கு கட்சிகள் மதிப்பளிப்பது அதிகம். ஆகையால் தமிழ் அரசியல் தலைவர்களிடம் பிரிவினைவாதத்தை இல்லாமல் செய்ய மக்களால் மாத்திரமே முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலிருந்து வெளியேற வேண்டுமென ஒருசிலர் தெரிவிக்கின்றனர். அவர் அவ்வாறு வெளியேறினால் அது தமிழ் மக்களுக்கே பெரும் பாதிப்பாக அமையும் எனவும் லிங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்கள் அனைவரும் இன மத வேறுபாடுகள் இன்றி தமிழ் அரசியல் தலைவர்களை ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.