Sep 25

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை விமர்சித்துள்ள அமைச்சர் மங்கள


மனித உரிமைகள் சம்பந்தமாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வௌியிட்டுள்ள கருத்தை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர விமர்சித்துள்ளார். 

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், பிரபல்யம் அடைவதற்காக கருத்து தெரிவிக்கும் சந்தரப்பங்களில் தவறிழைத்து விடுவதாக அமைச்சர் மங்கள சமரவீர விமர்சித்துள்ளார். 

பல தசாப்தங்களாக மத போக்கு கொண்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு மனித உரிமைகள் சம்பந்தமாக பாடம் எடுப்பதற்கு மேற்கத்தியவாதிகள் முயற்சிப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார். 

அண்மையில் புனித மத்தேயு ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இடம்பெற்ற மத நிகழ்வில் உரையாற்றும் ​போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தற்காலத்தில் மேற்கத்திய சமூகத்தின் புதிய மதமாக மனித உரிமைகள் பாடம் மாறியுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார். 

இதேவேளை மனித உரிமைகளை எதிர்க்கும் விதமாக வௌியாகியுள்ள செய்தி உண்மையாக இருந்தால் அது வெட்கப்படக் கூடிய விடயம் என்று காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸச தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.