Sep 25

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கான அறிவிப்பு!

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வீதி எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை, வாகனப் போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்படும் என போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

புதிய களனிப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக, வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க செல்லும் ஒழுங்கை ஆரம்பமாகும் இடத்திலிருந்து, இரண்டு மீற்றர் அகலம் மற்றும் 200 மீற்றர் தூரம் வரையிலான நெடுஞ்சாலையே மூடப்பட்டிருக்கும்.

இது குறித்து பொது மக்களும் சாரதிகளும் கவனம் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.