Sep 25

அனைவரும் ஒன்றிணைந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும்


வடக்கில் ஆவா குழுவினரை அடக்குவதற்காக பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர். இருப்பினும் தெற்கில் அவ்வாறான சம்பவம் ஏதும் ஏற்பட்டால் அதனை அடக்குவதற்கு பொலிஸாரிற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எம்பிலிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்காலத்தில் தினந்தோரும் கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் அவற்றை அடக்குவதற்காக அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதில்லை எனவும் இதனால் மக்கள் அனாதரவற்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்காலத்தில் போதைப்பொருட்கள் பாவனை பரவலாக காணப்படுவதன் காரணத்தால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சமயத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து போதைப்பொருட்களில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.