Sep 25

கொள்ளைக் கும்பல் களுவாங்சிக்குடியில் சிக்கியது!


மட்டக்களப்பில் பல்வேறு பிரதேசங்களில் கொள்ளை சம்பவங்ளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொட்டிபாளையம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட கும்பலை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 4 பேர் கொள்ளைச் சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் எனவும், ஏனைய 4 பேரும் சந்தேகநபர்கள் விற்பனை செய்த பொருட்களை வாங்கியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து சுமார் முப்பத்தெரு பவுண் நிறையுடை தங்க நகைகளும், இரண்டு இலட்சம் ரூபா பணமும், இரண்டு டிஜிட்டல் கமராக்கள், கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதுள்ளதுடன் கொள்ளைக்குப் பயன்படுத்திய கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அக்கரைப் பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வைத்தே கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் தங்க நகைப் பொருட்கள் சில அக்கரைப்பற்று மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள நகைக்கடைகளிலிருந்தும் மீட்கப்ட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் குணவர்த்தனவின் தலைமையில் துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் இவ்வாறு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் களூவாஞ்சிகுடி, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பல இடங்களில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளிலிலிருந்து தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.