Sep 25

இன்றைய ராசிபலன் (25.09.2018)

மேஷம்


மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். போராடி வெல்லும் நாள். 


ரிஷபம்


ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


மிதுனம்


மிதுனம்: எதையும் சாதிக் கும் தன்னம்பிக்கை வரும்.உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைபகிர்ந்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். முயற்சியால் முன்னேறும் நாள்.


கடகம்


கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார்.  புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.


சிம்மம்


சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும்.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். 


கன்னி


கன்னி: உங்கள் பலம் பலவீ னத்தை உணர்வீர்கள். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர் களின் ஆதரவுப் பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 


துலாம்


துலாம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்றுநிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகை களை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.


தனுசு


தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள்.  உழைப்பால் உயரும் நாள். 


மகரம்


மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துவாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


கும்பம்


கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.செலவுகளைக் குறைப்பிர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறு வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


மீனம்


மீனம்: ராசிக்குள் சந்திரன்நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பா ருங்கள். லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.