Jun 13

இலங்கையில் 8 திருவள்ளுவர் சிலைகளின் திறப்பு விழாக்கள்

சென்னை,மயிலாப்பூர், இராதாகிருட்டிணன் சாலை, கிளாரியன் பிரெசிடென்ரு விடுதி. 

என் வேண்டுகோளை ஏற்று, இலங்கைக்கு ஒவ்வொன்றும் 8 அடி உயரமான 16 திருவள்ளுவர் சிலைகளைச் சென்னையில் வடித்து, அன்போடு நன்கொடுத்தவர் செவாலியர் டாக்டர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி.

என் வேண்டுகோளை ஏற்று இலங்கைகு வந்த திருவள்ளுவர் சிலைகளைப் பொறுப்பேற்று, 16 மாவட்டங்களுக்கும் அனுப்பியவர், இலங்கை அரசின் மாண்புமிகு இராசாங்கக் கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன்.

16 சிலைகளுள் 8 சிலைகளுக்கான திறப்புவிழாக்கள், இலங்கையில் 15.6 புத்தளம், 16.6 மன்னார், முள்ளியவளை, 17.6 கிளிநொச்சி, 18.6 சாவகச்சேரி, 19.6 புளியங்குளம், 20.6 மட்டக்களப்பு, 22.6 கொழும்பு என நடைபெற உள.

செவாலியர் வி.ஜி.சந்தோசம்அண்ணாச்சி தலைமையில், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், தமிழிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என 33 பேர் இலங்கைக்குப் பயணிக்கிறார்கள். திறப்புவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.