Sep 24

சிறிதரன் இன்று ஜெனீவாவிற்கு விஜயம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று(திங்கட்கிழமை) ஜெனீவாவுக்குப் பயணமாகவுள்ளார்.

நாளை(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவர், பல்வேறு பக்க அமர்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், குறித்த விஜயத்தின் போது அவர் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து இலங்கையின் குறிப்பாக வடக்கு, கிழக்கின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.