Sep 24

50 ஆயிரம் புத்தகங்கள் மலையக பாடசாலைகளுக்கு


தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்களில் 50 ஆயிரம் புத்தகங்கள், மலையக பாடசாலைகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.கல்வி இராஜாங்க அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒரு லட்சம் புத்தகங்களில் யாழ்ப்பாண நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், மீகுதியான 50 ஆயிரம் புத்தகங்களே ஏனைய மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.இதற்கமைய, மத்திய, ஊவா, சப்ரகமுவ, உட்பட மாகாணங்களில் உள்ள பாடசாலை வாசிகசாலைகளுக்கு வழங்குவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.