Sep 24

தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்தார்கள்


கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தன்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி த சில்வாவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி படுதோல்வியடைந்த முழுப்பொறுப்பும் தன் மீது சுமத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், தோல்வியின் ஒரு பங்காளியாக தான் இருப்பினும், அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.