Sep 24

நிலவில் தெரிந்ததா பாபா முகம்

Image

சென்னையில் நேற்றிரவு நிலவில் பாபாவின் முகம் தெரிவதாக பரவிய வதந்தியினை தொடர்ந்து சென்னை பரபரப்படைந்தது.

நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாகவும், அதில் பாபா நம்மை பார்க்கிறார் எனவும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனால் சென்னை நகர பகுதி மக்கள் அனைவரும் ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

தொடர்ந்து நிலவில் பாபாவின் முகம் தெரிவதனைப்போன்றே சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்கள் பரவியதால், நிலவை காண தொலைநோக்கிகளுடன் தங்களது வீட்டு மாடுகளுக்கு விரைந்தனர் சிலர். பொதுமக்களும் ஆங்காங்கே நின்று கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

சென்னையில் தொடங்கிய வதந்தி, தமிழகம் முழுவதும் பரவ தொடங்கியதால் மக்கள் பரபரப்பு அடைந்தனர். ஆனால், அதற்குள்ளாக மேகங்களுக்காக தன் முகம் மறைந்துகொண்டது நிலவு. உண்மையிலேயே நிலாவில் பாபா முகம் தெரிந்ததா? தெரியவில்லையா? அந்த "நிலாவுக்கே வெளிச்சம்"!