Sep 24

பாடசாலை மாணவர் ஒருவரை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைது


பாடசாலை மாணவர் ஒருவரை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.17 வயதான குறித்த பாடசாலை மாணவர் கடந்த 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.அந்த மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, நேற்று அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்களில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை, 3 கிராம் ஹெரோயினுடன் மோதரை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.