Sep 24

நாடாளுமன்றத்திற்கு அருகில் தாழிறக்கம்


நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள நடைபாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.இன்று அதிகாலை இந்த தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தலங்கம காவற்துறை தெரிவித்தது.இதன் காரணமாக டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் மூன்று பாலம் சந்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கான ஒழுங்கை மூடப்பட்டுள்ளது.குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு காவற்துறையினர் கோரியுள்ளனர்.