Sep 22

நோர்த் யோர்க் பகுதி விபத்து: பொலிஸார் தீவிர விசாரணை

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விபத்து, டவுண்ஸ்விவ் பார்க் பகுதியில் ஷெப்பேர்ட் அவனியூவில், கீல் வீதியின் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இவ்விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் தொடர்பு பட்டதாகவும், மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் இருவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஏறக்குறைய 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு மதுபோதை காரணமாக இருக்காது என தெரிவித்துள்ள பொலிஸார், விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.