Sep 22

கல்வி முறையில் ஏற்படுத்தப்படும் மாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு!

ஒன்ராறியோவில் மாநிலம் தழுவிய கல்வி முறையில் ஏற்படுத்தப்படும் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர்.

அண்மையில் லிபரல் அரசாங்கத்தினால் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு சீர்திருத்தப்பட்ட பாலியல் கல்வி முறையினை இல்லாது செய்து, ஏற்கனவே இருந்த 1998ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கல்வி முறையினை மீண்டும் கொண்டு வருவதற்கு டக் ஃபோர்ட் தலைமையிலான தற்போதைய ஒன்ராறியோ மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், டக் ஃபோர்ட் தலைமையிலான அரசின் இந்த முடிவிற்கு, மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்தோடு, வகுப்புகளை விட்டு வெளிநடப்பு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில கலவி அமைச்சின் பேச்சாளர், அடுத்த வாரத்தில் கல்வி முறைமை தொடர்பிலான கலந்தாராய்வு கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அதில் அனைத்து மக்களையும் கலந்துகொண்டு தமது கருத்துகளை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.