Sep 22

தொடரூந்து ஒன்றில் தீ பரவல்..


கொழும்பு – தெமட்டகொடை தொடரூந்து தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று தொடரூந்து பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.சீரமைப்பு பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு தரித்து வைக்கப்பட்டுள்ள தொடரூந்து பெட்டிகளிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெமட்டகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் 3 வாகனங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதாக அந்தப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.