Sep 22

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி, இசன்பெஸ்ஸகல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குழுவொன்றின் மீது இவ்வாறு காட்டு யானை தாக்கியுள்ளது. 

மதவாச்சி, பூனேவ, கிடவரங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 42 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாழலயில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.