Sep 22

வாகனங்களின் விலை அதிகரிக்கலாம்!


தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு வாகனத்தின் விலை ரூபா 250000 இருந்து ரூபா 800000 ஆக அதிகரிக்கவுள்ளதாக இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில்  இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றமையினால்  வாகன விலை அதிகரிக்கப்படவுள்ளதென வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.