Sep 22

03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்


பாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள அயோத்யா நகர் பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய குழந்தை ஒன்று அதே பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் படித்து வந்தார்.

இந்த நிலையில் பாடசாலை முடிந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட வான் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த குழந்தையை அந்த வானின் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய குறித்த குழந்தையை அவரது தாயார் குளிக்க வைத்த போது நடத்துனரால் தனக்கு ஏற்பட்டவற்றை அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, அந்த நடத்துனர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டது.போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த நடத்துனர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு 12 வயதிற்கும் குறைவான குழந்தைகள், சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் மத்திய பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.