Sep 22

ஹவுஸ்மேட்களை ஆத்திரமடைய செய்த ஐஸ்வர்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டில், ஐஸ்வர்யா கண்டெயினரை கீழே தள்ளிவிட, அது ஜனனியின் காலில் பட்டு இரத்தம் வந்ததால், போட்டியாளர்கள் ஐஸ்வர்யா மீது கோபமடைந்தனர். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், அதில் ஜனனி மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற போட்டியாளர்களான பாலாஜி, ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் ரித்விகா ஆகியோர் இந்த வாரம் நேரடியாக எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், குறைவான வாக்குகளைப் பெறும் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதால், இந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இன்றைய எபிசோட்டில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, கண்டெயினரில் உள்ள கோலமாவை சேமிக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், அதிக அளவு வைத்துள்ளவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

இந்த டாஸ்க்கின் போது, ஐஸ்வர்யா ஜனனியின் கண்டெயினரை கீழ தள்ளி விட, அதில் நொறுங்கிய கண்ணாடி துண்டுகள் ஜனனியின் காலில் கிழித்து ரத்தம் கொட்டியது, உடனே போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவைத் திட்டத் தொடங்கினர்.

இதனால், கோபமடைந்த அவர் மற்ற போட்டியாளர்களிடம் அவர்கள் யாரும் விதிப்படி விளையாடவில்லை என கத்துகிறார்.

இதனைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு மிகவும் பிடித்த சமையல் என சகப் போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர். இதில், விஜயலட்சுமி மற்றும் தாடி பாலாஜி ஆகியோரை அதிகம் பேர் தேர்வு செய்தனர். இதன்பின், போட்டியாளர்கள் தங்களின் வாராந்திர லக்சுரி டாஸ்க்கை செய்தனர். இதில், அனைவரும் ஒற்றுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.