Sep 22

மட்டமான அரசியல் செய்யும் ராகுல்: ஸ்மிருதி தாக்கு

பிரதமர் மோடியை பொய்யாக விமர்சித்து காங்., தலைவர் ராகுல், மட்டமான அரசியல் செய்கிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

சூரத்தில் நடந்த 3 நாள் கண்காட்சியான 'சோர்ஸ் இந்தியா 2018'ல் கலந்து கொண்ட மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மலிவான விளம்பரம் தேடுகிறார். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியது போல், 'கோமாளி இளவரசர்' என்பதை, மணிக்கொரு முறை நிரூபிக்கிறார்.

ராகுல் மட்டமான அரசியலுக்கு முன்மாதிரியாகியுள்ளார். ஒரு புறம் அவர் பிரதமரை கட்டிப்பிடித்து, அன்பின் அரசியலைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் பிரதமரை விமர்சிப்பதிலிருந்து பார்லி., மற்றும் நாட்டு மக்களிடையே தன்னால் பொய் உரைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.