Sep 22

பங்களாதேஷை பந்தாடியது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ஆசிய கோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் கிரிக்கெட் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் மற்றும் இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், லீக் சுற்றுகள் முடிந்து, தற்போது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்காளதேச அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒருவர் பின் ஒருவராக பெவிலியனுக்கு திரும்பினர்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பின் விளையாடிய இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, தனது அற்புதமான பந்துவீச்சால் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் புவனேஷ்குமார் தலா 3 விக்கெட்களை வீழ்த்த வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 173 ரன்கள் மட்டும் குவித்தது. அந்த அணியில் மெஹிடி ஹசன் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.