Sep 22

ரபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதில் எங்கள் தலையீடு இல்லை - பிரான்ஸ் அரசு

இதுதொடர்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

பிரான்ஸ் நிறுவனங்களின் பங்குதாரர்களாக இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதில், தற்போது தேர்வு செய்ததில் வருங்காலங்களில் தேர்வு செய்யப்போவதில் அரசின் தலையீடு ஏதும் இல்லை.

எனவே, தங்களுக்கு பொருத்தமானவர்களை பங்குதாரர்களாக தேர்வு செய்துகொள்ள பிரான்ஸ் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதன் பின்னர் இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை இந்த பங்குதாரர்களின் உதவியுடன் பிரான்ஸ் நிறுவனங்கள் செயல்படுத்தும். 

இதன் அடிப்படையில், பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த இந்திய நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தகளில் பிரான்ஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.