Sep 21

இலங்கை இளையோர் அணியில் யாழ்.மத்திய கல்லூரி மாணவன்!

பங்களாதேஷில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாமில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வராசா மதுசன் இடம்பிடித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள குறித்த தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

செல்வராசா மதுசன் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

எனினும் உடற் தகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாக இவர் அப்போது குழாமில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

அதன் பின்னர் உடற் தகுதிச் சோதனையில் வெற்றியடைந்த நிலையிலேயே தற்போது இலங்கை அணிக்குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த், ஆசியக் கிண்ணத் தொடருக்கான தயார் நிலை வீரர்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.